Sunday 12 June 2016

ஸ்ரீகாளிகாம்பாளின் சுப மந்திரம் பகைவர்களை ஒடுக்க திருத்த

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.


இலங்கை நாட்டில் வாழும் சகோதரர். பலவகையில் சத்ருக்களின் சல்லியத்தினால் அவதியுற்று எம்மிடம் கேட்டார். ஸ்ரீகாளிகாம்பாளின் காவியந்தாருங்கள் என்று, யாம் தனிப்பட்ட ஒருவருக்காக தர இயலாது. இப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்கிறேன். தங்களைப் போன்ற ஏணைய சகோதரர்களுக்கும் உதவும். என்று சொல்லி அம்பாளிடம் முறையிடும் தன்னையும் தனை சார்ந்தோர்களையும். துற்செயல் கொண்டோரிடமிருந்து காத்துக்கொள்ள 

சுபமந்திரப் பதிவு

ஓம் திருக்கண் காளிகாம்பிகையே உன் திருமுகத்தழகும், குலாவியமனமும் பயங்கர வடிவமும் கொண்டவளே, பாதக்கிண்கிணீயும் நேமிநீங்காத்திவ்விய கரமும் கடகமின் நூராலும் தாழ்ந்த செங்கரமும், சிவனாரிடத்து பஞ்சானமும், எனைப் பகைத்த அறிவிலா மூடர்களின் செய்கைகள் எனையணுகாதிருக்க  ஒருமாத்திரைப் பொழுதில் நேமிக்கிரையிடுவாய் காளிகாம்பிகையே, உன்பாதாரவிந்தம் யான் தொழுதேன் என்பகை தீர்ப்பது உன் பாரமல்லவோ இதுவுன் கடனே அட்சரி வராகி மகவீரி ஓம் ஐயுங் கிலியும் சௌவும் ஆனவளே ஐங்காரத்து சர்வலோக மாதாவே சிதம்பர நற்தேவி என்னை பகைத்தோரை ரட்சித்து காத்தருள்வாய். வசிவசி வசிவசி ஸ்வாஹ 

என்று அனுதினம் காலை ஸ்நானம்செய்து, அவள் ஆலயம் சென்று மனமுருக மனதுக்குள் வாசித்து வர சகல சத்ருக்களின் செய்கைகள் அடியோடு மாள்வதுமில்லாமல் அவர்களும் நற்குணம் பெறுவார்கள். 

குறிப்பு: (நீங்கள் அவர்களுக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்திருக்ககூடாது)

Thursday 2 June 2016

சல்லியங்களில் இருந்து விடுதலை பெற முருகன் சுபமந்திரம்

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.



கீழ்வரும் சுபமந்திரம் துஷ்டர்களின் தீவினையிலிருந்து அகப்படாமலிருக்க, விடுதலைப்பெற.
சுபமந்திரம்

ஓம் சரஹணபவனே சங்கரீயீன்ற சண்முகனே முருகா 
தந்திமுகவன் தமையா இருகாலமும் சரஹணபவா 
எனவுரைக்கு மென்னிடர்கள் தவிர்த்திடவே மாட்சிகொண்டெழுந்து காலில் சதங்கையுங் கொஞ்சிட சக்தி வேலெடுத்து மயில் மீதுதாவியே துஷ்டர்களென் மீதேவிய தீவினையை சங் ரங் அங்ஙென சம்ஹாரம் செய்திட சடுதியில் வருவாய் சடாட்சர சரவணபவனே

என்று அனுதினம் ஸ்நானம் செய்து காலையிலும் மாலையிலும் முடிந்த அளவு ஜபித்து த்யானம் செய்து வர தீவினைகளிலிருந்து விடுபடலாம்.