Monday 11 July 2016

பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "






கிராமத்திலாகட்டும் நகரத்திலாகட்டும். நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் " காமதேனுவாகவும், மஹாலட்சுமியாகவும் " போற்றி வழிபட்டு வளர்த்து வருவார்கள் " பசுவை " அம்மனின் கிருபையால் அதை பராமரித்து வருபவர்களுக்கு பசுவின் மடிபெருத்து, பாலானது பெருகி,வளர்ப்போரின் வாழ்வில் தனசம்பத்து பெருகும். அப்போது மனம் பொருக்காத ஒரு சிலர் ஒன்று கூடி பேசிக்கொள்வார்கள். அந்தப் பசுவின் மடியைப்பாருடா ஒருநாளைக்கு குறஞ்சது இருபது லிட்டர் குறயாம பால் கொடுக்கின்றது. பிறகு ஏன் அவன் பணஞ்சேர்க்கமாட்டான். எம்பாங்க அந்த நேரமே அந்தப் பசுவிற்கு பலமான கண் அடி விழுந்திடும். அன்னயிலயிருந்து அந்தப்பசு இரண்டு லிட்டர் பால் கொடுப்பதே மிகசிரமமாகி விடும் (இது யான் அனுபவத்தில் கண்டது) பசு மாட்டிற்கே கண்திருஷ்டின்னா ! பார்த்துக்கோங்க. கீழ்வரும் சுபமந்திரத்த நாளொன்று நூறு உரு வீதம் நூறு நாளுக்கு , உரு கொடுத்து சித்தி செய்து கொண்டால், இது போன்ற கண்திருஷ்டியால் அவதியுறும் பசுக்களுக்கு. தோள்மீது போட்டுக்கொள்ளும் சுத்தமான பருத்தி துணியால் துண்டால், மந்திரத்தை 21 முறை காலை மாலை, இப்படியாக 9 நாள் மந்திரித்து பசுவின் நெற்றியில் விபூதியைத் தடவி. அதன் சரீரத்தின் மீதும் தடவி விட , கண்திருஷ்டி நீங்கி பழைய நிலையை விட. சற்று அதிகமாகவே பால் சுரக்கும். நம்புவர்களுக்கு மட்டுமே. 

மூலமந்திரம்

குன்றதிரப் புல்மேய்ந்து, குளமதிர நீர் குடித்து, மண்ணதிர மேய்ந்து வருகின்ற காராம்பசுவே, உன்னை உற்றுப்பார்த்தவன் கண்களிரண்டும், பாம்பு கண்போலே வெடிக்கவும், ஆனைக்கண்டால் பாலாய் சொரியவும், ஒம்காளி ஓம்பிடாரி ஓம்நமசிவய. 

என்று செபிக்கவும்.

No comments:

Post a Comment