Wednesday 6 April 2016

ஜாதகத்தில் ராகு பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்




   ஒருவரது ஜாதகத்தில் 1வது ஸ்தானமாகிய கீர்த்தி மூர்த்தி, 2வது, ஸ்தானமாகிய குடும்ப சௌபாக்கியம், 3வது ஸ்தானமாகிய சகோதர நற்பூஷணம் 4வது,ஸ்தானமாகிய வாகனங் கல்வி. சுகசயனம். 5வது,ஸ்தானமாகிய மந்திரம், மாமன், சந்தானம். 7வது, ஸ்தானமாகிய விவாஹம்,போகம், மகிழ்ச்சி, யாத்திரை, 8வது ஸ்தானமாகிய தண்டனை, அவமதிப்பு, நோய். கண்டம், 9வது ஸ்தானமாகிய குருபக்தி, நிதி, வருமானம்.சந்தானம். 10வது ஸ்தானமாகிய தொழில் வியாபாரம், உத்யோகம், மெய்ஞானம். 12வது ஸ்தானமாகிய கவலை, சன்யாசம். மோக்ஷம் இந்த ஸ்தானங்களில் இராகு பகவான் அமர்ந்தால் துற்பலனையேத் தருவார். இதிலிருந்து ஓரளவு விடுபட்டு மனம் சாந்தம் பெற வேண்டி, அவரை துதிக்கும் அவருக்குண்டான

சுபமந்திரம்

ஓம் இராகுவே, உயர்தர இராகுவே, உலகிலே துயர்மிக உண்டாகச் செய்யும் பகவானே, கரும்பாம்பு ரூபமாய் கலங்கிடச் செய்த பகவானே கதியென யுனையே நினைந்து கழலடிப் பணிந்தேன் வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

No comments:

Post a Comment